ஆப்பிரிக்கா…
ஆப்பிரிக்காவில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நகரில் இருந்து 100 கிமீ தொலைவில் கனகாபா நகர் இருக்கிறது. இந்த நகரில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டு இருந்தது.
குறித்த பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.இந்த நிலையில், அங்குள்ள நெடுஞ்சாலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்துள்ளது. இதனால் பேருந்து வேகமாக தன்பாட்டில் சென்றுள்ளது.
இதனை அடுத்து சாலையில் நடுவே உள்ள தடுப்புசுவரை இடித்துக்கொண்டு, எதிர்திசையில் செல்லவே, எதிரே பயணித்த லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த கோர விபத்தில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.