தங்கம் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சி தகவலை தெரிவிக்கும் நிபுணர்கள்.!!

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கம்விலை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமிற்கு ரூ.41 உயர்ந்து ரூ.5125 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் இன்று ரூ.256 உயர்ந்து ரூ.41,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை, ஒரு கிராமிற்கு ரூ.71.10 ஆகவும், 1 கிலோவிற்கு ரூ.71,100 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உலக அளவிலான முதலீட்டின் காரணமாக உயர்ந்து வருவதாகவும், வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.