அணில் முரளி
சினிமாவில் ஹீரோவுக்கு இணையான ஒரு நபராக வருபவர் தான் வில்லன் என்ற கதாபாத்திரம். அதற்க்கு சினிமாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்னவென்பதை நாம் அனைவரும் அறிவோம். அன்று முதல் இன்று வரை நாம் பல விதமான வில்லன் கதாபாத்திரத்தை பார்த்திருப்போம்.
மேலும் சினிமாவுக்கு பல விதமான வில்லன்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அணில் முரளி மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், தனுத நடித்த கோடி, நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் அணில் முரளி.
இந்நிலையில் நடிகர் அணில் முரளி இன்று மரண மடைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த செய்தி திரைத்துறை மட்டுமின்றி பலரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு பல மலையாள நடிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல நபர்கள் தங்களின் இரங்கலை தற்போது இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இறந்த அணில் முரளிக்கு அசல் அவரைப்போன்ற தோற்றமுடைய மகன் உள்ளது என்பது குறிப்பிட தக்கது இவரது பிரிவால் வாடி துடிக்கும் பையன் பொண்ணு மனைவிக்கு ஆழ்ந்த இரங்கல்