இன்றைய ராசிபலன்: 01.08.2020: ஆடி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஆகஸ்ட் 01,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹஜ் 10ம் தேதி, 1.8.2020 சனிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 10:39 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:16 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்த யோகம்

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : ரோகிணி * பொது : மகா பிரதோஷம்

மேஷம்: புதிய வாய்ப்புகளைப் பெறும் நாள். குடும்பத்தில் நெருக்கம் நன்றாக இருக்கும் ஆரோக்கியம் பற்றி கவனம் தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்பு உண்டு. தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்: பணியில் அதிக கவனம் தேவைப்படும் நாள். வழக்குகளுக்குத் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவார்கள். பொறாமை காரணமாகச் சிக்கல் உண்டாகலாம். நீண்ட நாள் பிரச்னை தீர முயற்சி எடுப்பீர்கள்

மிதுனம் : தடைகள் நீங்கும் நாள். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சி கூடும்.

கடகம்: வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் நாள். தந்தையின் ஆரோக்யம் தேறும். முயற்சிகள் வெற்றி அடையும். பெண்களுக்கு இனிமையான தகவல் வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் : திறமைகள் வெளிப்படும் நாள். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சகபணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.

கன்னி: வேறுபட்ட நாள். தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுச் சரியாகும். பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். பெண்கள் பொறாமைக்காரர்களால் தொல்லைக்கு ஆளாவர்.

துலாம்: இனிமையான நாள். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பார்கள். பெண்கள் திறமை காரணமாக நற்பெயர் பெறுவர். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும்.

விருச்சிகம்: பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும் நாள். நண்பர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும்.

தனுசு : சாதனை நாள். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தடைபட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவைத் தவிர்க்கவும்.

மகரம்: நிம்மதி கிடைக்கும் நாள். சுபநிகழ்ச்சிகள் சற்று தள்ளிப் போகக்கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் பயம் நீங்கும். பணியில் பொறுப்பின்மை காரணமாக சிரமங்கள் நேரலாம்.

கும்பம் : பயம் தீர்ந்து நன்மை பெறும் நாள். குடும்பத்துடன் உற்சாகமாக பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப் போகக்கூடும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: தேவையற்ற கவலைகள் சூழும் நாள். திருமணம் பற்றி நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி தொடர்பான முயற்சிகளை துவக்கலாம். எதிரிகளின் தொல்லைகள் மறையும்.