இலங்கையில் மீண்டும் கொரோனா ஆபத்து… சுகாதாரப் பிரிவின் முக்கிய எ ச்சரிக்கை..!!

சுகாதாரப் பிரிவினரால் வி டுக்கப்பட்ட எ ச்சரிக்கை!

நாட்டில் கொரோனா ஆபத்து இன்னும் முற்றாக நீங்கவில்லை என சுகாதார பிரிவு எ ச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன் தினம் பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதனை அடுத்து அவருடன் தொடர்புடைய 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கான PCR பரிசோதனைக்காக இதுவரையில் 1.3 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆ பத்து இதுவரையில் குறையவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

இதற்கமைய இலங்கை பூராகவும் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.