5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!

சீனா..

சீனாவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பொம்மை காந்த மணிகளை விழுங்கிய நிலையில், அவரை இரண்டு மாதங்களுக்கு பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது மருத்துவர்கள் அ திர்ச்சியடைந்தனர்.

சீனாவின் கிழக்கு மாகாணமான Shandong-ல் இருக்கும் Jinan Children’s மருத்துவமனைக்கு பெற்றோர் அண்மையில் தன்னுடைய ஐந்து வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அவர்கள் அங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொம்மைகளுடன் விளையாடும்போது Buckyballs என்றும் அழைக்கப்படும் சுமார் 50 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக தாய் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஏனெனில், முன்பு இதைப் பற்றி அறிந்திருந்தாலும், அது இறுதியில் வெளியேறிவிடும் என்று நினைத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த குழந்தை எந்த ஒரு அசாதாரணமாகவோ அல்லது வ லி யையோ உணரவில்லை.

இந்நிலையில், குறித்த காந்த மணிகளை விழுங்குவதால், ஏற்படும் ஆ பத்து குறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதைப் பார்த்த பின்பே இவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் சிறுமியை எக்ஸ்ரே ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுமியின் வயிற்றில் குறித்த பந்துகளின் ஒரு பெரிய மூட்டை போன்று இருப்பதைக் கண்டு அ திர்ச் சியடைந்துள்ளனர். சுமார் 190 காந்த குண்டுகள் இருந்துள்ளன.

இதனால் இதை அ றுவை சி கிச்சை செய்தால் மட்டுமே எடுக்க முடியும் என்று சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு எ ச்சரிக்கை தகவல் என்று இந்த விடயத்தை இணையவாசிகள் அதிகம் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.