கேரளா..
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அணுஜித். இவருக்கு தற்போது 27 வயதாகும் நிலையில், இவர் பள்ளியில் மாணவராக கடந்த 2010 ஆம் வருடத்தில் ஐ.டி.ஐ மாணவனமாக பயின்று வருகையில், இரயில் தண்டவாளம் சேதமடைந்து இருப்பதாய் பார்த்து, கைகளில் சிகப்பு துணியுடன் 30 நிமிடம் ஓடி பலரின் உ யிரை காப்பாற்றிய பெருமைக்குரியவராவார்.
தற்போது ஓட்டுநராக அணுஜித் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கொட்டாரக்கரையில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மூ ளை ச்சா வு அ டைந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களின் சம்மதத்தின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடல் உறுப்புக்கள் தானத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அணுஜித்தின் உடலில் உள்ள இதயம், சிறுநீரகம், கண்கள், கை எலும்புகள் மற்றும் சிறுகுடல் போன்ற 8 உறுப்புக்கள் எடுக்கப்பட்டு, 8 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. உடலால் அணுஜித் இ றந்திருந்தாலும், தனது உடல் உறுப்புகளால் 8 பேருடன் வாழ்ந்து வருகிறார்.