நடிகை வனிதா…
நடிகை வனிதாபற்றி ஒவ்வொரு நாளும் புது புது விடயங்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது.தற்போது அவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படம் வெளியாகி வருகின்றது.
வனிதாவின் மூன்றாவது திருமணம் பயங்கர சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இதுகுறித்து பிரபலங்கள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி என பலரும் பேசினர். இதில் சூர்யா தேவியுடன் பேட்டி எடுத்து வனிதாவின் திருமண பஞ்சாயத்தில் மாட்டியவர் தான் நாஞ்சில் விஜயன்.
வனிதா விடயத்தில் லட்சுமிராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் கஸ்தூரி போன்றவர்கள் கருத்து கூறுவதை கொஞ்சம் நிறுத்திவிட்ட நிலையில் நாஞ்சில் விஜயன் மட்டும் வனிதா விடயத்தை விடுவதாக இல்லை.
வனிதாவைக் குறித்து அடிக்கடி புகைப்படம், மற்றும் தகவல்களை வெளியிட்டு வரும் நாஞ்சில் சமீபத்தில் வனிதா வேறு ஒருவருடன் கையில் மதுவை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தினையும், வனிதாவின் திருமணத்தினைக் குறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திய காட்சியினையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதற்கு தக்க பதிலடியாக வனிதா, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் கைது மதுகோப்பையை வைத்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதே சமயத்தில் வனிதாவுடன் நெருக்கமாக இருக்கும் நபர் யார் என்ற கேள்விக்கும் வனிதா பதிலளித்துள்ளார். இந்த நபர் தனது குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நபர் என்றும் தனது குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.