கொரோனாவால் இ றந்த பாட்டியின் ச டலத்தை தள்ளுவண்டியில் மாயானத்துக்கு கொண்டு சென்ற பேரன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

இந்தியா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அ வதியுற்றுள்ளார்.

இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பெண் கடந்த வெள்ளியன்று உயிரிழந்துள்ளார்.

அவர் இ றந்த செய்தி கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் 12 மணிநேரம் கடந்து ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பாட்டியின் சடலத்தை மயானம் வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன்.

இப்புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் நகராட்சியின் அ லட்சிய போக்கை க ண்டித்து வருகின்றனர்.