பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்..கணவர் மீது புகார்..!!

சீரியல் நடிகை சீலா..

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர், சேலம் மாவட்டம், இடைப்பாடி காவல்நிலையத்தில், நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீலாவின் கணவர் இடைப்பாடி, வெள்ளாண்டிவலசைச் சேர்ந்த, சவுந்தரராஜன்(31). எம்.பி.ஏ., முடித்த இவர், கிள்ளியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில், இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்தே அவர் புகார் செய்துள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது, வெவ்வேறு இனத்தவர் என்பதால், வேறு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதனால், என்னுடன் வாழ மறுக்கிறார். அவர் மீதும், அவரது தாய் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திருமணத்தின்போது எடுத்த புகைப்படம், நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவுகளை, பொலிசாரிடம் ஆதாரமாக ஷீலா ஒப்படைத்துள்ளார்.

இதனை அடுத்து ஷீலா, சவுந்தரராஜனிடம் விசாரித்த பொலிசார், நீதிமன்றத்தில் பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.