பிள்ளைகளின் படிப்பிற்காக வறுமையிலும் தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்…கண்ணீரை ஏற்படுத்திய சம்பவம்.!!

கர்நாடகா…

தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் மற்றும் நிறுவனத்தில் பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்காக அம்மாநில அரசு சந்தனா என்ற தொலைக்காட்சி மூலமாக இணைய சேவை கற்பித்தலை நடத்தி வருகிறது.

இணைய வகுப்புகளால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சிரமத்தை அடைந்த நிலையில், சுமார் 5 கிமீ தூரம் நடந்து சென்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக ஊரடங்கால் வேலையை இழந்த பெண், தனது தாலியை விற்று வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம் நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில், கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கர்நாடக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இணையதள வகுப்புகள் மற்றும் அரசு தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வசதி கூட கிடையாது. கடந்த ஒரு மாதமாக பிள்ளைகள் படிக்க இயலாமல் தவித்து வந்த நிலையில், அண்டை வீட்டிற்கு சென்று வந்தாலும் அது பின்னாளில் மனஉளைச்சலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். இதனையடுத்து எனது தாலியை ரூ.20 ஆயிரத்திற்கு அடகு வைத்து ரூ.14 ஆயிரம் செலவில் தொலைக்காட்சி வாங்கி வைத்திருப்பதாகவும், அதன் மூலம் கல்வியை குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.

மேலும், நான் ஏழை தொழிலாளியாக இருந்து வருகிறேன். நானும் படிக்கவில்லை. எனது குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருவிடவேண்டும் என்று எனது தலையை அடகு வைத்தேன். எங்கள் வீட்டில் இருந்த பழைய தொலைக்காட்சி பழுதானதால் வேறு வழியின்றி, தாலியை அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டது என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

இந்த செய்திகள் அடுத்தடுத்து பரபரப்பாக வெளியாகவே கர்நாடக மாநில கனிமவளத்துறை மந்திரி கஸ்தூரியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு நாட்களில் தேவையான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று கூறினார். இதுமட்டுமல்லாது தாலியை வறுமைக்காக அடகு வைத்ததாக எண்ணிய நகைக்கடை உரிமையாளரும், அடுத்தடுத்து வெளியான செய்திகளை பார்த்து கஸ்தூரியின் தாலி சங்கிலியை அவருக்கே மீண்டும் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.