மகர ராசி அன்பர்களே!
ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார்.
ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
இதனடிப்படையில் இன்று மகரம் ராசியினருக்கு ராகு – கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.
பலன்கள்
இந்த பெயர்ச்சியில் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது.
தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும்.
வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர்.
அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர்.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும்.
உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள்.
உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். யாரையும் முழுமையாக நம்பவேண்டாம்.
வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை.
உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும்.
இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள்.
தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.
அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள்.
உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2 – 6 – 7 – 9
மலர் பரிகாரம்: துளசியை சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.