அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும் தங்கத்தின் விலையின் உயர்ச்சி..

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை 11வது நாளாக இன்றும் உயர்வடைந்துள்ளது. கொரொனாவால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை முதலீடு செய்யத் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் திகதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் திகதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் திகதி ரூ.40 ஆயிரத்தையும், ஜூலை 31-ஆம் திகதி ரூ.41ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.

அதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது, ஜூலை 21-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் திகதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.3,952 வரை உயா்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி 1 கிராம் தங்கம் ரூ.5196க்கு விற்கப்படுகிறது.