இன்றைய ராசிபலன்: 03.08.2020: ஆடி மாதம் 19ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஆகஸ்ட் 03,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹஜ் 12ம் தேதி, 3.8.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி இரவு 9:54 வரை, அதன்பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 8:26 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : திருவாதிரை * பொது : ஆவணி அவிட்டம், திருவோண விரதம்

மேஷம்: எதிர்பார்க்கும் விஷயங்கள் வெற்றியடையும் நாள். சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. பெரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட கால நோயின் தீவிரம் குறையும்.

ரிஷபம்: புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். வழக்குகளை நீங்களாகத் தொடுக்க வேண்டாம். சுபச்செலவு உண்டு.

மிதுனம் : அக்கம் பக்கத்தினரை அனுசரித்து போக வேண்டிய நாள். அலுவலகத்தில் உங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக லாபம் குறையும். விமர்சனங்கள் மனஉளைச்சல் தரும்.

கடகம்: வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் நாள். மாமன் மூலம் மனநிறைவு பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நற்செய்தி கிடைக்கும். பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கலைஞர்களுக்குப் புதுஒப்பந்தம் கைக்கு வரும்.

சிம்மம் : சிரமம் ஏற்பட்டு மீளும் நாள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். குடும்பத்தில் புதுநபர் வருகை உண்டு. தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டாம்.

கன்னி: காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். மனதில் நிம்மதி கூடும். தம்பதி ஒற்றுமை நல்ல முறையில் இருக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய விஷயங்களைக் கற்க விரும்புவீர்கள்.

துலாம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்களுக்கு சிறிய மனவருத்தம் ஏற்படும். கலைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவர்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்கும் நாள். நண்பர்களுக்காக செலவு செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகளின் போக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் தொட்டது துலங்கும்.

தனுசு: நல்லவர்கள் யார் என்பதை கண்டறியும் நாள். பணவரவு சிறிதளவே திருப்தி தரும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். சக பணியாளர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும்.

மகரம்: பழைய சிக்கலை தீர்க்கும் நாள். பெண்களுக்குப் புதுப் பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். பணியாளர்கள் நினைத்தது நிறைவேறும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: பழைய ஏமாற்றங்களை மறக்கும் நாள். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும். உயரதிகாரிகளின் தயவால் விருப்பம் நிறைவேறும். தந்தை வழி உறவினர்களால் ஏற்பட்ட சிரமம் தீரும். சொத்துத் தகராறுகள் அகலும்.

மீனம்: குழந்தைகளால் மகிழ்ச்சியடையும் நாள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில வேலைகளை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவ முன்வருபவர்களின் எண்ணிக்கை உயரும்.