இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி – 100 இற்கும் அதிகமானோருடன் தொடர்பு!

இலங்கையில்

பொலநறுவை மாவட்டத்தை சேர்ந்த லங்காபுர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் புதிதாக நேற்று ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

இந்த நோயாளியுடன் 19 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த அனைவரும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலநறுவை சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பீசீஆர் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

அந்த பாதுகாப்பு அதிகாரியின் மனைவி மற்றும் மகளுக்கு தற்போது பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.