இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளிகள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிய கொரோனா நோயாளிகள் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
இனங்காணப்பட்டவர்களில் 6 பேர் ஐக்கிய அரபு எமிரகத்தில் இருந்து நாட்டுக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகும்.
மற்ற நபர் பொலநறுவை, லங்காபுர பிரதேச செயலக அலுவலகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபர் என கூறப்படுகின்றது.
சமூகத்திற்குள் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களுக்கு அருகில் இருந்தர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடந்த பல மாதங்களாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், லங்காபுர பகுதியில் 3 பேர் சமூக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.