இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு…!!

இலங்கையில் டெங்கு நோய் பரவும் அபாயம்..

நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் சில பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.

அத்துடன் மேலும் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 23934 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.