நடிகர் சேது
மறைந்த டாக்டர் மற்றும் நடிகர் சேதுராமன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையினை அவருடைய மறுபிறப்பாக குடும்பத்தினர் கொண்டாடுகின்றனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் 36 வயதே ஆன இளம் நடிகரான டாக்டர் சேதுராமன் கடந்த மாரச் மாதம் 26-ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் சேதுராமன், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் பிரபலமான தோல் மருத்துவரான சேதுராமன் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். அதன் காரணமாகவே சேதுராமனுக்கு திரைத்துறையில் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு சேதுராமன் உமையாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சகானா என்ற பெண் குழந்தை இருக்கிறது.
சேதுராமன் கடந்த மார்ச் மாதம் மரணமடையும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால் மீண்டும் சேதுராமனே குட்டி சேதுவாக வந்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.