ராகு கேது பெயர்ச்சி 2020 : கும்ப ராசிக்காரர்களே! எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகுமாம்!

கும்ப ராசிக்காரர்களே!

ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார்.

ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

இதனடிப்படையில் இன்று கும்ப ராசியினருக்கு ராகு – கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.

பலன்கள்

இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர்.

பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள்.

கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள்.

குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும்.

எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும்.

ஆடம்பர செலவுகள் வேண்டாம். புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். கோபம் கூடவே கூடாது.

ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்.

லாபகரமான முதலீடுகள் செய்யலாம். அதற்கான பொருளாதார சூழல்கள் உருவாகும். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். பணி நிரந்தரம் உண்டு. பதவி உயர்வு – எதிர்பார்த்த பணி இட மாற்றம் ஏற்படும்.

தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு.

உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும்.

லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.

எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.

மாணவர்கள் நேரத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும்.

படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9

மலர் பரிகாரம்: சங்குபுஷ்ப மலரை சனிக்கிழமைதோறும் சிவனுக்கு படைத்து வேண்டுங்கள்.