இன்றைய ராசிபலன்: 05.08.2020: ஆடி மாதம் 21ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஆகஸ்ட் 05,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி, 5.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:10 வரை, அதன்பின் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம் காலை 10:31 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : பூசம் * பொது : ஜெயேந்திரர் பிறந்த தினம்.

மேஷம்: தலைமை அதிகாரிகளின் நம்பிக்கையை பெறும் நாள். பெண்கள் முயற்சியில் வெற்றி காண்பர். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுக்கேற்ற வரவு வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் மகிழ்வீர்கள்

ரிஷபம்: பணியிடப் பிரச்னைகளின் காரணத்தை கண்டறியும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பலநாள் போட்ட திட்டம் நிறைவேறும். உறவினர் உதவுவர். கடந்த சில நாட்கள் இருந்த கலக்கம் நீங்கும். சுமாரான பண வரவு உண்டு.

மிதுனம் : வேலைகளை விரைந்து முடிக்கும் நாள். புதிய பாதையில் செல்வீர்கள். மேலதிகாரியிடம் பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். நேற்றைய பிரச்னைகள் தீரும்.

கடகம்: மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். முன்கோபத்தைக் குறையுங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். பணியிடத்தில் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிவரும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: வெற்றி பெறும் நாள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். வாகன வசதி பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டிய நாள். வீடு கட்டும் திட்டம் தள்ளிப் போகக்கூடும். புதிய வேலைக்கான முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வாகன வசதி பெருகும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் நிறையும்.

துலாம்: தொழில் செய்வோருக்குச் சிறு பற்றாக் குறைகள் ஏற்படும் நாள். பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியடையும்.

விருச்சிகம்: பிறரின் குறைகளை தீர்த்து வாழ்த்து பெறும் நாள். சில பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பண வரவு சற்றே திருப்தி தரும். புது முயற்சிகளுக்குத் தாயாரின் ஆதரவு உண்டு. நண்பர்கள் அதிருப்தியடைவர்.

தனுசு: அலுவலகப் பணிகளைத் திறம்பட செய்து முடிக்கும் நாள். தேவையற்ற வகைகளில் நேரம் வீணாகும். பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் உடல் நலம் பற்றிய கவலை வந்து போகும்.

மகரம்: உடல் நலம் சீராகும் நாள். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் அகலும். காலை நேரத்தில் வரும் செய்தி மகிழ்ச்சியளிக்கும். திறமையான நிர்வாகத்தினால் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.

கும்பம்: முயற்சிக்குரிய பலன் நிறைவாய்க் கிடைக்கும் நாள். கலைத்துறையினர் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பர். விலகியிருந்த உறவினர்கள் வந்து ஒட்டிக் கொள்ளுவார்கள். மனக்கவலைகள் நீங்கும்.

மீனம் : தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினரிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பெண்களுக்கு மதிப்புக் கூடும்.