காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே தீக்கு இரையாக்கிய காதலன்..!!

இங்கிலாந்து…

இங்கிலாந்தில் காதலிக்காகக வீட்டை அலங்கரித்து இறுதியில் வீடே இல்லாமல் போன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் தெற்கு யாரஃஷிரின் மாகாணத்தில் உள்ள அபேதலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க். இவரது நீண்டகால தோழி பெயர் ரியா. இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில், மார்க்கிற்கு தனது காதலியிடம் காதலை தெரிவிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

இந்த காதல் மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்து, நேற்று இரவு வீட்டினை பூக்களால் அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளார். தனது காதலி வரும் போது வீடே ஜொலிக்க வேண்டும் என்று பலத்த ஏற்பாடுகளை செய்த நிலையில், தனது காதலி ரியாவை அலுவலகத்தில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

மார்க் காரில் புறப்பட்டு சென்ற சில மணித்துளிகளை உள்ளாகவே, மெழுகுவர்த்தியை இருந்து தீ வீடுமுழுவதும் பற்றிக்கொண்டு எரிந்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனை அறியாத மார்க் தனது காதலி ரியாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரவே, வீடு தீக்கு இறையாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மார்க், சற்றும் தளராது தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். வீடு ஒருபுறம் தீப்பற்றி எரிய, மற்றொரு புறம் மார்க்கின் காதல் வெளிப்பாடு என செய்வதறியாது ரியா திகைத்து நின்றுள்ளார்.

பின்னர் சில வினாடிகள் கழித்து காதலை ஏற்றுக்கொண்ட ரியா, தானும் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். தம்பதிகள் இருவருக்கும் தீயணைப்பு படையினர் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு தீயணைப்பு படையினர் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த விஷயத்தை தெற்கு யாரஃஷிரின் தீயணைப்பு படையினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, திருமண அழைப்பிதழுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.