நடிகை சங்கவி..
தென்னிந்திய திரை உலகில் நடிகை சங்கவி 1993 ஆம் வருடம் அஜித் நடித்து வெளிவந்த அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தளபதி விஜயுடன் ரசிகன் என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார். நடிகர் விஜயுடன் நடிக்கும் பாடல் காட்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடையில் நடித்து இருப்பார்.
அதனை தொடர்ந்து நடிகை சங்கவியின் புகழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்று தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நிறைய படங்களில் நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய சினிமா செய்திகளில் வெளியானது.
மேலும் சிலர் இருவரும் காதலிப்பதாகவும் கூறினர். ஆனால், இதுகுறித்து சங்கவி நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுபோன்ற செய்திகள் வந்தவுடன் அவர் விஜய் படங்களில் நடிப்பதை பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை என்றும்,மேலும், விஜயும் என்னுடன் இணைந்து நடிக்க கூடாது என முடிவு செய்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று சங்கவி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், தெலுங்கு சினிமாவில் அதிகப்படியான கவர்ச்சி காட்டி ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த சங்கவி குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பாக வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் பலவும் வந்த வண்ணம்தான் இருந்தன. 47 வயதானாலும் கூட கிளாமர் காட்சிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.