பொதுத் தேர்தலில் வாக்களித்து பிரபல்யம் அடைந்த புதுமண தம்பதி!

இலங்கையில்

திருமணம் செய்தவுடன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்ற தம்பதியின் புகைப்படம் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் பன்னல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றள்ளது.

திருமண ஆடை அணிந்த நிலையில் இந்த தம்பதி தங்கள் வாக்கினை வழங்கியுள்ளனர்.

விஷாரத தினேஷ் உதயசிறி மற்றும் சமல்கா விஜேசிங்க ஆகிய தம்பதியே இவ்வாறு வாக்களித்துள்ளனர்.

பன்னல, கொட்டுவெல்ல சுதர்ஷனாராம விகாரையில் வாக்களிப்பதற்காக குறித்த தம்பதி செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாக்களிப்பு இன்று நாடு பூராகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.