ஆகஸ்ட் 06,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 22ம் தேதி, துல்ஹஜ் 15ம் தேதி, 6.8.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 12:29 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் பகல் 12:17 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு
* பரிகாரம் : தைலம் * சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் * பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்: சுறுசுறுப்பாய் ஓடியாடிப் பணிபுரியும் நாள். உதவி செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் தகவல் உண்டு. திட்டமிட்ட விஷயங்களை நன்கு செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்: விரும்பிய இடமாற்றம் பற்றிய தகவல் வரும் நாள். சிறு ஏமாற்றங்களை தாண்டி முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப ஒற்றுமை கவலை தரக்கூடும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டு.
மிதுனம் : எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும் நாள். பெற்றோரின் உதவியுடன் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களின் முயற்சிகள் பாராட்டு பெற்றுத் தரும். நிலுவைப் பணிகளை பாடுபட்டு செய்து முடிப்பீர்கள்.
கடகம் : மனஅமைதி சுமாராக இருக்கும் நாள். யாருடனும் வம்பு பேச வேண்டாம். பெண்களின் புதிய முயற்சிகள் நிறைவேறத் தாமதமாகும். மறைமுக எதிரிகளால் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும்.
சிம்மம் : சொத்துக்கள் விற்பதில் ஆதாயம் கிடைக்கும் நாள். நண்பர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். பெண்களின் விருப்பம் நிறைவேறும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு விரும்பிய உதவிகள் கிடைக்கும்.
கன்னி : புதிய தொழில் வாய்ப்புகள் வரும் நாள். குடும்ப ஒற்றுமையில் முன்னேற்றம் இருக்கும். பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மனதில் இருந்த பயங்கள் நீங்கும். பெண்களின் முயற்றி வெற்றியடையும்.
துலாம்: நன்மை கிடைக்கும் நாள். மற்றவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். உங்களின் தனிப்பட்ட தேவைக்கான பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம் : சுயநல எண்ணம் மேலோங்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழிலில் மாற்றம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை யோசித்துச் செயலாக்குங்கள். முன்பிருந்த பயங்கள் குறைய ஆரம்பிக்கும்.
தனுசு: நண்பர்களின் ஆலோசனையால் நன்மை பெறும் நாள். சொத்துக்கள் வாங்கி விற்பதில் தாமதம் ஏற்படக்கூடும். புதிய தொழில் முயற்சிகள் பற்றி யோசியுங்கள். கலைத்துறையினருக்கு தேக்க நிலை ஏற்படும்.
மகரம்: முயற்சிகள் கைகூடும் நாள். நெருங்கிய உறவினரிடமிருந்து மகிழ்ச்சி தரும் தகவல் வரும். கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்கள் மனம் மாறுவர். சிக்கலான பணிகள் சிரமமின்றி முடியும். கவலைகள் குறையும்.
கும்பம் : நிதானப் போக்கால் நன்மை பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய திட்டங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களுடனான உற்சாகப் பேச்சு நிறைவளிக்கும்.
மீனம்: வெற்றிகளை சந்திக்கும் நாள். தொழில் செய்வோர் மன உளைச்சலுக்கு பிறகு நிம்மதி காண்பர். பெண்கள் சவால்களைத் திறம்பட சமாளித்து வெற்றி அடைவர். கூடுதலான வேலைப்பளு உண்டாகும்.