மனைவி குறித்து பெருமை கொள்ளும் இலங்கை ஜனாதிபதி..
நேற்று ஜனாதிபதி தனது திருமணநாளை கொண்டாடுகின்றார்.அதன் போது “எனது வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம் என் மனைவிதான்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் தங்களது 40ஆவது திருமண நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பதிவில், “40 வருடங்களுக்கு முன்னர், இதே நாளிலிருந்து அன்பான மனைவியாக, பாசமான தாயாக, நல்லதொரு நண்பியாக, என்னோடு நிழலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களே என் வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம்” என அவர் பதிவிட்டுள்ளார்.