யாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாண தமிழ் மாணவி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பூர்வீக இடமாக கொண்ட தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் இரஞ்சன் அனித்திரா (வயது19) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

கடந்த திங்கட்கிழமை தனது சக பல்கலைக்கழக நண்பிகளுடன் கடலில் நீராடச்சென்றவேளையே நீரி மூழ்கி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தப்பியுள்ளனர் .