ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
டுபாயில் இருந்து இந்தியா வந்த விமானம் ஒன்று இரண்டாக முறிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
191 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இரண்டாக முறிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
பிந்திய தகவலின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.