வயிறு வீங்கி, வருடக்கணக்காக தவிக்கும் இளம் பெண்.. மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத விசித்திரம் நோய்..!!

சீனா..

சீனாவில் உள்ள பெண் ஒருவர் விசித்திரமான நோய் ஒன்றினால் அவதியுறுகின்றார். ஹுவாங் குவாஸ்கின் என்ற பென்னே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இவரது வயிறு திடீரென வீங்கிக்கொண்டே சென்றுள்ளது. அவரது எடையும் 121 பவுண்ட்டாக அதிகரித்துள்ளது.

மேலும், 44 பவுண்ட்டாக வயிறு மட்டும் எடையை கொண்டுள்ள நிலையில், கடந்த 2 வருடமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், வயிறு பெரிதாகி அதிகளவு வலி ஏற்படுவதாகவும் இப்பெண்மணி கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண் அங்குள்ள ஹூவாங் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் வலியை குறைக்க மருந்து கொடுத்துள்ளனர். எனினும்,வயிறு வீக்கம் மட்டும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றுள்ளது.

இவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனையில் செய்கையில் கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி ஏற்படுதல், அடிவயிறு மற்றும் மார்பு பகுதிகளில் தேவையற்ற திரவம் சுரப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், ஏன் வயிறு பெரிதாகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய இயலவில்லை.

இந்த விடயம் குறித்து ஹூவாங் தெரிவிக்கையில், ” வயிறு பெரியதாக வீங்கியிருப்பதால் சரியாக தூங்க இயலவில்லை. எனது குழந்தைகளை கவனிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தெருவில் நடந்து செல்கையில் கர்ப்பிணி பெண்கள் என்று எண்ணுகிறார்கள்.. நான் விரைவில் நலம்பெறுவேன் என்று நம்புகிறேன் ” என்று கூறியுள்ளார்.