ஆகஸ்ட் 07,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 23ம் தேதி, துல்ஹஜ் 16ம் தேதி, 7.8.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி நள்ளிரவு 2:13 வரை, அதன்பின் பஞ்சமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் பகல் 2:28 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம் * சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம் பொது : மகா சங்கடஹர சதுர்த்தி
மேஷம்: நினைத்தது நிறைவேறும் நாள். உடல் நலம் சீராக இருக்கும். புதிய வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு பதில் தாமதமாகும். புது தொழில் முயற்சிகள் பற்றிய சிந்தனை ஏற்படும்.
ரிஷபம் : முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.
மிதுனம் : விசா தொடர்பான முயற்சிகளை துவக்குவதற்கு உகந்த நாள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்: குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். பெண்களுக்கு பணிச்சுமை ஏற்படும். கடன் விஷயங்களில் ஏமாற்றம் உண்டாகக்கூடும். வியாபாரிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்மம் : பெண்களால் வருத்தம் ஏற்படக்கூடும் நாள். இயந்திரப் பணியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடன் பிரச்னைகளை சமாளிக்கப் பாடுபட வேண்டியிருக்கும். குழந்தைகளின் போக்கு கவலையளிக்கும்.
கன்னி : எதிர்பார்த்த பணி இடமாற்றம் தாமதமாகும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் போக்கில் மகிழ்ச்சி தரக்கூடிய மாற்றம் இருக்கும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் ஏமாற்றமளிக்கும்.
துலாம்: மருத்துவ சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு குறையும். பணியாளர்கள் பாடுபட்டுப் பணிகளை முடிப்பர். மாலை நேரத்துக்குப் பிறகு மனநிம்மதி ஏற்படும்.
விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய மனப்புழுக்கம் மறையும். காதலில் ஏற்பட்ட ஊடல்கள் நீடிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும்.
தனுசு : பெண்களுக்கு யோகமான நாள். நெருங்கிய நண்பர்களின் சண்டைகளை பொருட்படுத்த வேண்டாம். பயணங்கள் பற்றிய திட்டங்கள் தள்ளிப் போகக்கூடும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதமாகலாம்.
மகரம்: மனதில் குதுாகலம் நிறையும் நாள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய்நாடு திரும்பும் முயற்சியில் பொறுமை தேவை. தொழிலில் கூட்டாளிகள் தந்த பிரச்னைகள் மறையும். பணியாளர்களின் பொறுப்பு அதிகரிக்கும்.
கும்பம்: பிரிந்தவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் தெரியும் நாள். புதிய பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். வாழ்க்கை தேவைகள் பல நாட்களுக்குப் பிறகு நிறைவேறும். அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவி உண்டு.
மீனம்: பொறுமைக்குப் பரிசு கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணியாளர்களுக்குச் சரியான வழிகாட்டி கிடைப்பார்கள். தாயாருடன் கருத்து வேறுபாடு வந்து போகும்.