ஆகஸ்ட் 08,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 24ம் தேதி, துல்ஹஜ் 17ம் தேதி, 8.8.2020 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி அதிகாலை 4:04 வரை, அதன்பின் சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 4:52 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த – மரணயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : மகம், பூரம் * பொது : பெருமாள் வழிபாடு.
மேஷம்: தம்பதி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும் நாள். பிள்ளைகளின் நன்மைக்காக சில செயல்களை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். மனம் நிம்மதியடையும்.
ரிஷபம்: எடுத்த முயற்சிகள் தடைக்குப் பின் முடியும் நாள். மனதில் எதைபற்றியாவது சிந்தித்தவாறு இருப்பீர்கள். வியாபாரத்தில் சீரான போக்கு காணப்படும். வேலை தேடுவோருக்கு நற்செய்தி உண்டு. சுபநிகழ்ச்சி முயற்சிகள் தள்ளிப்போகும்.
மிதுனம் : எதிலும் சற்று தாமதம் ஏற்படும் நாள். தொழிலில் இருந்த பிரச்னை விலகும். பணியாளர்களுக்கு நன்மை உண்டாகும். பொழுது போக்கின்மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதின் சஞ்சலங்கள் மெல்லக் காணாமல் போகும்.
கடகம்: தெய்வீக விஷயங்களில் ஈடுபடும் நாள். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். திட்டங்களில் மாற்றம் உண்டு. பணியாளர்கள் புதிய பொறுப்புக்களை ஏற்பர். சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும்.
சிம்மம் : குடும்பத்தில் திடீர் விவாதங்கள் ஏற்படும் நாள். பணிகளில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வரவேண்டிய வருமானங்கள் தாமதப்படக் கூடும்.
கன்னி : உத்யோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். தம்பதி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தர்மம் செய்யத் தோன்றும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் புது ஒப்பந்தங்ளைப் பெறுவர்.
துலாம்: நிம்மதியான நாள். தொழில் தொடர்பான விவகாரங்களில் நிதானப் போக்கு காணப்படும். பணியாளர்களுக்குப் போட்டிகள் விலகும். குடும்பத்தில் வாக்குவாதம் தீரும். புதிய விஷயங்களைக் கற்று மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தரும் நாள். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனப் போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தனுசு: அலைச்சல் உண்டாகும் நாள். மனதில் தேவையேயில்லாத கவலை தோன்றும். கலைத்துறையினருக்கு வாய்ப்பு வரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன இடர்பாடுகளைத் தவிர்க்க இயலாது.
மகரம் : திறமைகள் வெளிப்படும் நாள். சிறு விஷயங்களில் மனநிறைவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணம் தள்ளிப்போகும். கலைஞர்களின் முயற்சிகள் பலன் தரும். பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.
கும்பம்: சவாலான வேலைகளை முடிக்கும் நாள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நேற்றிருந்த களைப்பு நீங்கும். கலைஞர்களுக்கு புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மீனம்: திடீர் யோகம் கிடைக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களால் உற்சாகம் பொங்கும். அரசால் உதவி உண்டு. வழக்கு சாதகமாக முடிவதற்கான அடையாளம் தென்படும். வேலையாட்களின் அன்பு கிடைக்கும்.