தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! ..கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்.!!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கம் விலை 43 ஆயிரத்தை கடந்திருந்த நிலையில் சற்று ஆறுதலாக இன்று ஒரே நாளில் 22 கார்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.5,380 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.43,040 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,651 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.45,208 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.