வெளிநாட்டில் வேலைக்குச் சென்றவருக்கு நேர்ந்த சோ கம்.. க தறி அ ழும் குடும்பம்..!!

தமிழகம்..

தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு செ ன்ற ந பர் ஒ ருவர் அ ங்கு ம ர்ம மான மு றையில் இ றந்துள்ளார்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தின் பெரியகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (40). இவர் மனைவி அம்சவல்லி (35). இந்த தம்பதிக்கு பிரேம்குமார் (15), பிரதாப் (13) என்ற 2 மகன்களும் அனுஷியா (10) என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

பெரியசாமி குடும்ப வறுமையினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விசா எடுத்து துபாய்க்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

அங்கிருந்தபடியே தினந்தோறும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்போனில் பேசி வந்த இவரின் செல்போன் கடந்த திங்கட்கிழமை முதல் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அவர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார் எனத் தெரியாமல் ப தற்றத்தில் இ ருந்துள்ளனர்.

இதனை அடுத்து அவருடன் வேலை செய்து வந்த எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் உ யிரிழந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை வேலைக்காக அழைத்துச் செல்வதற்கு எழுப்பிய போது அவர் உ யிரிழந்த நி லையில் பி ணமாகக் கி டந்தது தெரிய வந்துள்ளது என்று தொலைபேசி மூலம் அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அ திர்ச்சியும் வே தனையும் அடைந்த அந்தக் குடும்பத்தினர் செய்வதறியாமல் தி கைத்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.

அதில், எனது கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது. அவர் பணியாற்றிய முதலாளியிடம் அலைபேசி செய்து கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதன் மர்மத்தை கண்டுபிடிப்பதோடு அவரின் உடலை விரைவில் கொண்டு வர உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்திற்காக பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற பெரியசாமியை நினைத்து அவர் குடும்பத்தார் கதறி அழுத புகைப்படம் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.