கடலலையின் திடீர் கொந்தளிப்பு..எதிர்பாராமல் பறிபோன இளைஞனின் உயிர்..!!

கன்னியாகுமரி…

நேற்றைய தினம் திடீரென கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே இருக்கும் அழிக்கால் என்ற மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், கடல் நீர் அங்கிருக்குந்த வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர், தன்னுடைய வீட்டிற்கு முன்பாக கடல் மணல் மூட்டைகளை கொண்டு வீட்டிற்கு புகும் கடல் நீரை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப் போது எதிர்பாராதவிதமாக வந்த கடல் அலையானது வேகமாக மதில்சுவர் மீது மோ தியதில் அஸ்வின் மீது மதில் இ டிந்து வி ழுந்துள்ளது. இ டிந்த வி ழுந்ததில் அவர் படுகாயமுற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கோட்டாட்சியர் மயில் என்ற அதிகாரியை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தங்களுடைய பிரதேசத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்டவை அமைத்து தருமாறு மனு கொடுத்துடும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பி, வா க்குவா தம் செய்துள்ளனர்.