கட்டுநாயக்க விமான நிலையம்
சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் திறக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை வருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கு அமைய இரண்டு விமானங்கள் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.