ஆகஸ்ட் 10,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 26ம் தேதி, துல்ஹஜ் 19ம் தேதி, 10.8.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி முழுவதும், அசுவினி நட்சத்திரம் இரவு 9:57 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயிர் * சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம் * பொது : சிவன் வழிபாடு.
மேஷம்: துடிப்புடன் செயல்படும் நாள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். முன்பு அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.
ரிஷபம்: மன நிறைவான நாள். கலைஞர்கள் மனசாட்சியுடன் நடப்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். பணவரவு எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம் : மனக்குறை தொடரும் நாள். கடன் விஷயங்களை தள்ளிபோடலாம். குடும்பத்தினருடன் பேசும்போது நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். மற்றவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம்.
கடகம்: மனதில் மகிழ்ச்சி கூடும் நாள். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வார்கள். புதிய எண்ணங்களை செயல்படுத்த வேண்டாம்.
சிம்மம் : சற்றே சோர்வான நாள். ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை கவனிக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். அவசரத்தில் தவறிழைக்கக் கூடும்.
கன்னி : எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும் நாள். வாழ்க்கைத் துணையின் குறையை பிறரிடம் பகிர வேண்டாம். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கும்.
துலாம் : உழைப்பால் உயரும் நாள். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆலோசனை கை கொடுக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்வீர்கள்.
விருச்சிகம்: பெண்கள் எதிர்பார்த்த செய்தியை பெறும் நாள். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கொள்வீர்கள்.
தனுசு: சுபநிகழ்ச்சி ஏற்பாட்டில் தடங்கல் நீங்கும் நாள். பணியாளர்களுக்கு சிறு மனக்கவலை உண்டாகும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வழக்கு, விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும்.
மகரம்: இயல்பான நாள். எதிலும் முன்னேற்றம் இல்லை என்ற எண்ணம் இருக்கும். பணக்கவலை சிறிதும் இருக்காது. குடும்ப சூழல் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். வாழ்வில் முன்னேறும் ஆவல் அதிகரிக்கும்.
கும்பம்: மகிழ்ச்சியான நாள். பணியிடத்தில் இடையூறுகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடாகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்: குதுாகலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். சிலருக்கு விருது கிடைக்கும்.