இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து!

இலங்கையில்

சமூகத்திற்குள் கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது மக்கள் உரிய சுகாதார ஆலோசனைக்கு அமைய தினமும் செயற்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவதன் மூலம் கொரோனா தொற்று சமூகத்திற்குள் பரவுவதனை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 27 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் இதுரையில் 2871 பேர் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.