மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல்.. 40 வயது நபருடன் 20 வயது இளம்பெண் ஓட்டம்!

தமிழகம்..

தமிழகத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன். 40 வயது மதிக்கத்தக்க இவர் மலையேற்ற பயிற்சியாளராக உள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், ஜீவாதார் என்ற தொண்ட நிறுவனம் உள்ளது. சென்னையை சேர்ந்த பிரபு சுந்தர் என்பவர் இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக உள்ளார்.

ஆரோக்யான் என்ற மலையேற்ற பயிற்சி நிறுவனத்தை, பயிற்சியாளர் சீனிவாசனுடன், சேர்ந்து பிரபு சுந்தர் கூட்டாக நடத்தி வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவில் நடந்து வந்த இந்த மலையேற்ற பயிற்சி நிறுவனத்திற்கு, சென்னை அடுத்த திருமுல்லை வாயிலை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி, ஒருவர் சென்றுள்ளார்.

மலையேற்ற பயிற்சி அளிப்பதாக 40 வயது மதிக்கத்தக்க சீனிவாசன், 20 வயது மாணவியை தன்னுடைய காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.

பின்னர் சீனிவாசனை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து, திருமுல்லை வாயிலில் இருந்து குடும்பத்தினருக்கு, தெரியாமல், அந்த மாணவி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

நாகலாபுரம் மண்டலம், சடுகுடு மடகு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்த குறித்த ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இருவரும் திருமண முடிவுடன் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கிருந்த நிர்வாகி பிரபு சுந்தர் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி, திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு பிரபு சுந்தர் தகவல் அறிவித்துள்ளார். இதனால் அங்கு உடனடியாக வந்த பெற்றோர், மாணவிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மறுபடியும் கடந்த மாதம் 4-ஆம் திகதி சீனிவாசனை திருமணம் செய்யப்போவதாக பெற்றோருக்கு மாணவி போனில் தகவல் கூறிவிட்டு மாயமாகியுள்ளார்.

இதனால் அ திர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளனர். பொலிசார் உடனடியாக அவர்கள் தங்கியிருக்கும் கிராமத்திற்கு சென்று, ஆசிரமத்தில் சோதனையிட்டனர்.

ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால், யோக ஆசிரியரும், ஆசிரம நிர்வாகியுமான பிரபு சுந்தரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் அங்கிருந்த காரை பறிமுதல் செய்த பொலிசார், பிரபு சுந்தரத்தை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது கடந்த முறை இந்த காதல் ஜோடி ஆசிரமத்திற்கு வந்த போது, பிரபு சுந்தர் பெற்றோரிடம் அறிவித்து விட்டதால், அவரை சிக்க வைத்துவிட்டு, காதல் ஜோடியினர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டது விசாரணையின் போது தெரியவந்தது.

தற்போது வரை இவர்கள் இருவரும் எங்கு உள்ளனர் என்பது தெரியாததால், பொலிசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.