மொரீஷியஸ் தீவில் எண்ணை கப்பல் விபத்து!
நேற்றைய தினம் இந்தியப் பெருங்கடல் பகுதியியை அண்டியுள்ள மொரீஷியஸ் தீவிற்கு அருகில் ஆயிரம் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் கடற்பரப்பில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தால் இலங்கை கடல் எல்லை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கை கடல் எல்லைகளிலும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வது அதிகம் என அதிகாரி பேராசிரியர் டர்னி பிரதிப் குமார கூறியுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இவ்வாறான விபத்துகள் இடம்பெற்றால் அது நாட்டின் கடல் எல்லைக்கு அச்சுறுத்தலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதில் 1,000 தொன் அளவிலான எண்ணெய் கடற்பரப்பில் கசிந்துள்ளதாகத் செய்தி வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இலங்கை இந்த விடயத்தில் அவதானத்துடன் இருப்பது அவசியம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.