3.8 கோடி ஸ்காலர்ஷிபில் அமெரிக்காவில் உயர்கல்வியை படிக்கும் மாணவி! வீதியில் நடந்த சம்பவத்தால் உயிர் போன பரிதாபம்!!

இந்தியா..

இந்திய மாணவி ஒருவர் தனது கல்வித் திறமையால் 3 கோடியே 83 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்க பெற்று அதன் மூலம், அமெரிக்காவில் உள்ள பாக்சன் கல்லூரியில் உயர்கல்வியைப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊர் வந்த போது ஈவ் டீஸிங்கால் உயிர் இழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம், தாத்ரி மாவட்டம் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்த சுதீக்ஷா தனது கல்வித் திறமையால் 3 கோடியே 83 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்க பெற்று அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்த மாணவி, இந்த மாதம் அமெரிக்கா திரும்ப முடிவு செய்துள்ளார். அதற்காக சில பொருட்களை வாங்க புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மாமாவுடன் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அப்போது, வீதியில் இரண்டு நபர்கள் அவர்களின் வாகனம் அருகே வந்த மாணவியை மோசமான வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்து கொண்டே, அவர்களின் இருசக்கர வாகனத்தை பின்னால் வந்து இடித்து அவர்களை கீழே தள்ளி விட்டுள்ளனர். இந்த விபத்தில் சுதீக்ஷாவுக்கு தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இனை அடுத்து அந்த 2 நபர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து விசாரணை செய்த அவுரங்காபாத் போலீஸார், இளம்பெண்ணின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இவர் 2018ஆம் ஆண்டு 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தாத்ரி மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.