அமைச்சரான கையோடு ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை….

ஜீவன் தொண்டமான்

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கையோடு கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்துக்கு சென்றார்..

அங்கு தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல்கூறிய ஜீவன் தொண்டமான், தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இ.தொ.காவின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், உப தலைவர் சக்திவேல் ஆகியோரும் ஜீவனுடன் சென்றிருந்தனர்.