அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட நியமனங்களில் மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் அதற்காக ஜனாதிபதியிடம் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தர வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நியமித்த விசேட குழுவின் மூலமே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீதலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.