இன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஆகஸ்ட் 12,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 28ம் தேதி, துல்ஹஜ் 21ம் தேதி, 12.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:36 வரை, அதன்பின் நவமி திதி, கார்த்திகை நட்சத்திரம் நள்ளிரவு 2:25 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி * பொது : ஆடிக் கார்த்திகை.

மேஷம்: தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதரர்களுடன் ஒற்றுமை பிறக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம் : உதவிகள் கிடைக்கும் நாள். வேலைப்பளு குறையும். மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பதவியில் உள்ளோரின் நட்புக் கிடைக்கும்.

மிதுனம் : நினைத்தது நிறைவேறும் நாள். கலைஞர்களுக்குப் புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள்.

கடகம்: மனநிம்மதி பெறும் நாள். பணியிடத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத ஒரு வேலை முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம் : பிரச்னைகள் தீரும் நாள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

கன்னி: சில விஷயங்களில் திட்டமிட்டபடி நடக்காது. யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். யாரையும் நம்பிப் பணம் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.

துலாம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். சிக்கலான வேலைகளைக் கையில் எடுத்து கொள்ள வேண்டாம். சிறு அவமானம் ஏற்படக்கூடும். சக பணியாளர்களால் சற்று டென்ஷன் அடைவீர்கள்.

விருச்சிகம்: பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தெரியும். உறவினர் மூலம் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு : முயற்சியால் முன்னேறும் நாள். பேச்சில் முதிர்ச்சி இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவால் சவாலான வேலையை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு தள்ளிப்போகும்.

மகரம் : இனிமையான நாள். குடும்பத்தில் உள்ளவரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட தொல்லை நீடிக்கும்.

கும்பம்: அமைதியான நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கலைஞர்கள் பாராட்டுப்பெறுவீர்கள். திட்டங்களைச் செயலாக்குவதில் சிறு தாமதங்கள் ஏற்படும்.

மீனம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் வேலையாட்கள் திருப்தி அடைவார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். கடன் அடையும்.