யாழ் இளைஞனைக் காதலித்து மோட்டார் சைக்கிளை வாங்கியதன் பின் காதலைத் துண்டித்த பெண்!

யாழ்ப்பாணம்

யாழ். நகரில் யுவதியொருவரிடமிருந்து இளைஞர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் அவரை வழிமறித்தபோது, குறித்த யுவதிக்கு அந்த மோட்டார் சைக்கிளை தானே வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

நகரிலுள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றின் முன்பாக இந்த சம்பவம் நடந்தது. யுவதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு, வெளியில் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்டபோது, இளைஞர் ஒருவர் திறப்பை பறித்து மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன், யுவதியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இதன்போது யுவதி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அவர் யுவதியின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஓடிவந்து அந்த இளைஞனை வழிமறித்த போது, அந்த மோட்டார் சைக்கிளை யுவதிக்கு தானே கொள்வனவு செய்து கொடுத்ததாக குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களை காண்பித்துள்ளார்.

யுவதியுடனான காதல் உறவை பேணிய போது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்ததாகவும் சில மாதத்தில் தன்னுடனான உறவை அவர் துண்டித்து விட்டதாகவும் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்கும்படி தகவல் அனுப்பியும் யுவதி அதை திருப்பித் தராததால் பறித்ததாக தெரிவித்தார்.

இந்த சர்ச்சையை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொள்ளும்படி அங்கிருந்தவர்கள் இளைஞனுக்கு ஆலோசனை தெரிவித்தனர். எனினும் சர்ச்சையை தொடர விரும்பாத யுவதி முச்சக்கர வண்டியொன்றை மறித்து அதில் ஏறி சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.