ராஜபக்ஷர்களின் ஆட்டம் ஆரம்பம்! மைத்திரியை பழிவாங்கிய மஹிந்த

ராஜபக்ஷர்களின் ஆட்டம் ஆரம்பம்!

புதிய அரசின் அமைச்சரவை இன்று கண்டியில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சும் வழங்கப்படும் வாய்ப்பில்லையென அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா , மஹிந்த அமரவீர ஆகியோருக்கு மாத்திரம் அமைச்சுப் பொறுப்புகளை வழங்கவும் , மைத்திரிக்கு எதிர்காலத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

சுற்றாடல் அமைச்சை மைத்ரிக்கு வழங்க நேற்று உத்தேசிக்கப்பட்ட போதும் , அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதாக தெரிகிறது.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தயாசிறி ஆகியோருக்கு இராஜங்க அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.