இலங்கையில் கல்வியமைச்சு எடுத்துள்ள மிக முக்கிய தீர்மானம்!

கல்வியமைச்சு

இலங்கை கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலேயே திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டன.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு, அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.