இலங்கையில் நியமிக்கப்படவுள்ள மேலும் 2 புதிய அமைச்சரவைகள்?

இலங்கையில்

மேலும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த யாப்ப அபேவர்தன, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யப்பா, ரஞ்சித் சியம்பலபிட்டி, எஸ்.பி.திசநாயக்க, மஹிந்த சமரசிங்க, ஜோன் செனவிரத்ன ஆகியோர் இன்றைய தினம்அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், எஸ்.பி.திசநாயக்க நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதனிடையே, கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி ஊக்குவிப்பு அமைச்சராக இன்று யாரும் பதவியேற்கவில்லை.

கலாநிதி விஜேதாச ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவியேற்க திட்டமிடப்பட்டிருந்தாலும் இறுதியில் அது நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று பதவியேற்பு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த முறை பொலன்னருவை மாவட்டத்தில் 111,137 முன்னுரிமை வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா நியமிக்கப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.