குப்பைமேட்டில் கிடந்த 2 லட்ச ரூபாய்.!
தங்களுடைய வீடுகளில் குப்பைகளை கொட்டி வைத்துவிட்டு, சாலையோரம் வசித்து வந்த வயதான சகோதரர்களின் வீட்டை காவல்துறையினர் சுத்தம் செய்த போது, இரண்டு லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓட்டேரி அருகே 3வயதான சகோதரிகள் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில், பிரபாவதி என்ற மூதாட்டி சென்ற மாதம் இறந்துவிட்டார். தெருவோரம் கிடக்கும் நெகிழி குப்பைகளை விற்று வாழ்ந்து வந்த, மற்ற சகோதரிகள் அதிகப்படியான குப்பை வீட்டில் இருப்பதால் சாலையோரம் வசித்து வந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சாலைகளில் வசிக்கும் பலரையும், வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த காவல்துறையினர் விரைந்து வேளையில், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் அடைப்படையில் ஒரு வீடு இருப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று தங்க அறிவுறுத்தி இருக்கின்றனர். அப்போது வீட்டில் தங்க இடம் இல்லை என்று தெரிவிக்க, சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை வீட்டில் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீடு முழுவதும் குப்பை மேடாக காட்சி அளித்தன. அவற்றை நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினர் அகற்றிய போது அங்கே பணம் மற்றும் சில்லரை காசுகள் சிதறி விழுந்துள்ளன. அதில், செல்லாத 40,000 ரூபாய் உட்பட இரண்டு லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. வீட்டை சுத்தம் செய்த பின்னர், அந்த பணத்தை அவர்களிடம் ஒப்படைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.