அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் முதன்மை ஆலோசகரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண்!

புதிய அலுவலக பிரதானியாக இலங்கை பெண் நியமனம்

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகராகவும், தலைமை பணியாளராகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கை-அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு என்பவர் செயல்படுகின்றார்.

இலங்கை– அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு என்ற பெண் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.