நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிப்பது தொடர்பில் அவசர அறிவிப்பு!

பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிப்பது தொடர்பில் அவசர அறிவிப்பு

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 50000 பட்டதாரி நியமனம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதனை நேற்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இருந்தது.

அதன்படி, நியமனம் வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை ஞாயிற்றுக் கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.presidentsoffice.gov.lk/) வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி தமக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களின் பயிற்சிக்கான கடமைகளை பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர் வெளியிடப்படும் பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும். பட்டதாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 02 திகதி முதல் ஓராண்டு பயிற்சிக்கு உள்வாங்கப்படுவதுடன் மாதம் ரூபா 20000 உம் வழங்கப்படும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.