பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கல்வியமைச்சு

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே நாளையில் இருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி 2020 ஜூலை 28ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியிருக்கிறது.